ஆபாச படம் போனில் இருந்தாலே கைது….. மாஸ் காட்டும் காவல்துறை …!!

செல்போனில் ஆபாச படம் இருந்தாலே கைது செய்யப்படும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில் அதனை குறைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதன் ஒருபகுதியாக ஆபாச இணையதளம் முடக்கப்பட்டு , சிறார் ஆபாச படம் பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பலரின் வரவேற்பை பெற்ற இந்த உத்தரவினால் பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில்செல்போனில் ஆபாச படங்கள் வைத்திருந்தாலே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்கும் மாநிலமாக சென்னை உள்ளது. கூடிய விரைவில் குற்றங்களே இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாகும் என்று தெரிவித்தார்.