போடு செம….. ”அரபிக்குத்து” பாடல் செய்த மாஸ் சாதனை….. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…..!!!

‘  அரபிக் குத்து’ பாடல் யூடிபில் மாஸான சாதனை படைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் ஏப்ரல் 13ம் தேதி தியேட்டரில் ரிலீசான திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

24 மணி நேரத்தில் இத்தனை கோடி பார்வையாளர்களா? அரபிக்குத்து பாடலின் சாதனை!

இதனையடுத்து, வசூல் ரீதியாக இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தின் ”அரபிக் குத்து” பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பாடல் யூடிபில் மாஸான சாதனை படைத்துள்ளது. அதன்படி, இந்த பாடல் யூடியூபில் 325 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.