“மசூத் அசார் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு” – சீன தூதர்…!!

மசூத் அசார் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.

காஷ்மீர் மாவட்டம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் பிப்ரவரி 14 ம் தேதி வாகனங்களில் சென்ற துணை ராணுவ படைகள் (CRPF)  மீது  தற்கொலை படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலுள்ள ஜெய்ஷ்-இ – முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் ஜெய்ஷ்-இ – முகமது தீவிரவாத இயக்கம் உட்பட  மண்ணிலுள்ள அனைத்து தீவிரவாத இயக்கங்கள் மீது பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக நாடுகள் அழுத்தம் கொடுத்தது.

Image result for சீன தூதர்

இந்நிலையில் ஐநா.சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தாக்குதலுக்கு காரணமான  மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து தடை விதிக்க கொண்டு வந்த தீர்மானத்திற்கு சீனா மட்டும் தடையாக இருந்தது. இது குறித்து இந்தியா கடும் அதிருப்தியை வெளியிட்டது. தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு ஆதரவான  நிலைப்பாடுடன் சீனா உள்ளது. இந்நிலைப்பாட்டை  சீனா கைவிட வேண்டும் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கான சீன தூதர் லூவோ சாவோஹி மசூத் அசார் மீதான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார். சீனாவின் தடை தொழில்நுட்ப ரீதியானதுதான் என்றும் விளக்கம் அளித்துள்ள சீன தூதர் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.