“இது இல்லாமல் வெளியே வரக்கூடாது” தீவிர கட்டுப்பாடுகள்…. எச்சரிக்கை விடுத்த போலீஸ் சூப்பிரண்டு….!!!

முக கவசம் அணியாமல் வந்த 1,010 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸின் தாக்கம் அதிகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள 2 நாட்களில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். எனவே காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

அதில் 134 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு அனைவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 1326 மது பாட்டில்களும் இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதோடு தீவிர வாகன சோதனை நடத்தியதில் முக கவசம் அணியாமல் வந்த 120 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராத தொகையாக ரூபாய் 60,000 பணமும், சமூக இடைவெளியை பின்பற்றாத 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 2500 அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறி வெளியே சுற்றித் திரிந்த 17 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 8-ஆம் தேதி முதல் நேற்று வரை முகக்கவசம் அணியாமல் வந்த சுமார் 1,010 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராத தொகையாக ரூபாய் 2 லட்சத்தி 30 ஆயிரமும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 6500 வசூல் செய்யப்பட்டுள்ளது. அதோடு அரசின் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி ஊரடங்கு காலகட்டத்தில் வெளியே சுற்றித் திரியும் நபர்கள் மீது சட்டப்படியான கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *