மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை அறிமுகம் செய்தது……!!

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை அறிமுகம் செய்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை மற்றும் மதுரை ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . இன்று கூட்டணி கட்சிகளுக்கான மொத்த தொகுதிகளை திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

Image result for சு.வெங்கடேசன்

அக்கட்சியின் மாநில செயலாளர் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார் . அப்போது பேசிய அவர் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறை -வேற்றியுள்ளோம் என்று கூறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  பி.ஆர் நடராஜன் மற்றும் மதுரை வேட்பாளராக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க மாநில தலைவர் சு.வெங்கடேசன் என்று கூறி வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.