மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்….!!

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை அறிமுகம் செய்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை மற்றும் மதுரை ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . இன்று கூட்டணி கட்சிகளுக்கான மொத்த தொகுதிகளை திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அக்கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார் . அதில் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  பி.ஆர் நடராஜன் மற்றும் மதுரை வேட்பாளராக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க மாநில தலைவர் சு.வெங்கடேசன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளர் க்கான பட முடிவு

இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களான பி.ஆர் நடராஜன் மற்றும் சு.வெங்கடேசன் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் T.K ரங்கராஜன் கலந்து கொண்டனர்.