ரெனோல்ட் காருக்கு போட்டியாக மாருதி … இந்தியாவில் விற்பனைக்கு தயார்நிலை ..!!

மாருதி நிறுவனம் புதியதாக எஸ் பிரெஸ்ஸோ என்ற காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

மாருதி நிறுவனம் புதியதாக எஸ் பிரெஸ்ஸோ என்ற காரை கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மாருதியின் ஃப்யூச்சர் எஸ் கான்செப்டின்படி இந்த காரை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த கார்  வரும் 30 தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும், இந்த கார் ரெனோ க்விட் காருக்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது.

Image result for எஸ் பிரெஸ்ஸா

இந்த மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் நீளம் 3,565 மிமீ, அகலம் 1,520 மிமீ, உயரம் 1,564 மிமீ, வீல் பேஸ் 2,380 மிமீ ஆகும். மேலும், இதில் 27 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க்  வழங்கப்பட்டுள்ளது.  அதேபோன்று, ரெனோ க்விட் காரில் 155/80 ஆர்13 டயர்கள் உள்ளன. இந்த எஸ் பிரெஸ்ஸோ காரில் 165/70 ஆர்14 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த காரின் விலை ரூ.5 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *