மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அரியலூரில் பரபரப்பு…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் மருத்துவ உதவியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள விழுப்பனங்குறிச்சி கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 108 ஆம்புலன்சில் அவசரகால மருத்துவ உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பாலகிருஷ்ணன் வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பாலகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் பலமாக மோதி விட்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *