திருடு போன மருந்து பொருட்கள்…. உரிமையாளர் அளித்த புகார்…. 2 சிறுவர்கள் கைது….!!

மருந்து கடையில் திருடிய 2 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் முகமதுபாயிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தடங்கம்-சோகத்தூர் சாலையில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் முகமதுபாயிக் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மறுநாள் கடைக்கு வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் மருந்து பொருட்கள் திருட்டு போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து முகமதுபாயிக் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் 2 சிறுவர்கள் மருந்து கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் மருந்துகளை திருடி சென்றது தெரிய வந்துள்ளது. இது சம்பந்தமாக நல்லம்பள்ளி காந்தி நகர் பகுதியில் வசிக்கும் 18 வயது மற்றும் 17 வயது சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதில் 17 வயது சிறுவன் ஏற்கனவே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *