“மகனை கூப்பிட போனேன்” சரமாரியாக தாக்கப்பட்ட மருமகன்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மருமகனை தாக்கிய குற்றத்திற்காக மாமனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் ஜோசப் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லெனின் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ஜோசப்ராஜ் தனது மகனை திட்டியதால் கோபத்தில் சிறுவன் தனது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ஜோசப் ராஜ் தனது மகனை வீட்டிற்கு அழைத்து வரச் சென்றபோது அவரை மாமனாரான பெஞ்சமின் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்துள்ளார்.

அதன்பின் ஜோசப் ராஜாவை பெஞ்சமின் தடியால் தாக்கியுள்ளார். இதுகுறித்து ஜோசப்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெஞ்சமினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *