திருமணமாகி மூன்றே மாதம்… வரதட்சணை கேட்டு கொடுமை… ஆட்சியர் அலுவலகம் முன் தற்கொலை முயற்சி..!!

கோவையில் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண் ஒருவர் தான் கொண்டுவந்த பெட்ரோலை தன்மீது ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனை கண்டு அங்கிருந்த காவலர்கள் அதனை தடுத்து நிறுத்தி காந்திபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர். விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் சித்ரா என்பதும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு காரமடையைச் சேர்ந்த கௌரிசங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

பெற்றோரை இழந்த தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் வேறு வழியின்றி தற்கொலைக்கு முயற்சித்ததாக சித்ரா போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார். திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *