இந்த வழியா போக முடியல…. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மோதல்…. போடப்பட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 2 கும்பல்களுக்குகிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் புலிப்படை நிர்வாகியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த சிலர் சாலையை மறித்தபடி காரை நிறுத்திவிட்டு மது அருந்தி கொண்டிருக்கும் போது பனையூர் பகுதியில் வசித்து வரும் கவின் என்பவர் வேலையை முடித்துவிட்டு அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் சாலையின் குறுக்கே கார் நிறுத்தியதை கண்டித்து இருசக்கர வாகனத்தில் இருந்தபடியே தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார். இதனால் அங்கு மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் கோபமடைந்து கவினை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து பனையூர் பகுதியில் வசித்து வரும் மக்கள் நியாயம் கேட்டு அங்கு திரண்டு வந்ததால்  திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கும், அவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

அந்த மோதலில் 50-க்கும் மேற்பட்டோர் நாற்காலி, வாலி, உருட்டுக்கட்டை, பீர் பாட்டில் மற்றும் கற்களை கொண்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியதில் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த மோதலில் பனையூர் குப்பத்தில் வசித்து வரும் சுரேந்தர் என்ற வாலிபருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் இந்த மோதலில் 2 இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது 2 கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருப்பதற்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அந்த பகுதியில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *