வரலாற்றில் இன்று மார்ச் 20….!!

இன்றைய தினம் : 2019 மார்ச் 20

கிரிகோரியன் ஆண்டு : 79ஆம் நாளாகும்.

ஆண்டு முடிவிற்கு  : 286 நாட்கள் உள்ளன.

 

இன்றைய தின நிகழ்வுகள்:

1602 – டச்சு கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.

1616 – சேர் வால்ட்டர் ரேலி 13 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின்னர் இலண்டனில் விடுவிக்கப்பட்டார்.

1739 – நாதிர் ஷா தில்லியை கைப்பற்றி நகரைச் சூறையாடினான்.

1760 – அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் 349 கட்டிடங்களைச் அழித்தது.

1815 – எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் பொனபார்ட் 140,000 இராணுவப் படைகளுடனும் 200,000 தன்னார்வப் படைகளுடனும் பாரிசைமீண்டும் கைப்பற்றி “நூறு நாட்கள்” ஆட்சியை ஆரம்பித்தான்.

1854 – அமெரிக்காவின் குடியரசுக் கட்சி விஸ்கொன்சின் ரிப்போன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

1861 – மேற்கு ஆர்ஜெண்டீனாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் மெண்டோசா நகரை முற்றாக அழித்தது.

1913 – சீனத் தேசியக் கட்சியின் நிறுவனத் தலைவர் சுங் சியாவோ-சென் கொலை முயற்சியில் காயமடைந்தார். இவர் இரண்டாம் நாள் உயிரிழந்தார்.

1915 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது ஒதுச் சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.

1922 – ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் லாங்லி சேவைக்கு விடப்பட்டது.

1933 – டேச்சு அரசியல் கைதிகள் முகாமை அமைப்பதற்கான கட்டளையை ரெய்க்ஸ் பியூரர் எஸ் எஸ் ஐன்றிச் இம்லர் விடுத்தார்.

1934 – சப்பானில் ஆக்கோடேட் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீ 4,170 சதுர கிலோ மீட்டர் நகரை அழித்து சுமார் 2,165 பேர் கொல்லப்பட்டனர்.

1942 – போலந்தில் நாட்சி ஜெர்மனியரினால் கட்டாய வேலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 100 போலந்து நாட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1942 – மேற்கு உக்ரேனில் ரொஹார்ட்டின் நகரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 3,000 யூதர்கள் நாட்சி ஜெர்மனியரினார் கொல்லப்பட்டனர்.

1948 – சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் இடம்பெற்றது.

1956 – பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது.

1972 – வட அயர்லாந்து பெல்பாஸ்ட் நகரில் முதற்தடவையாக ஐரியக் குடியரசுப் படை கார்க் குண்டுத் தாக்குதலை நடத்தியது. ஏழு பேர் கொல்லப்பட்டனர், 148 பேர் காயமடைந்தனர்.

1987 – அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எயிட்சுக்கு எதிரான சிடோவிடின் என்ற மருந்தை அறிமுகப்படுத்தியது.

1988 – எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் அஃபபெட் நகரைக் கைப்பற்றினர்.

1995 – டோக்கியோவில் சுரங்கப் பாதை ஒன்றில் ஓம் சின்ரிக்கியோ என்ற மதக் கும்பல் நடத்திய நச்சு வாயுத் தாக்குதல் ஒன்றில் 12 பேர் கொல்லப்பட்டு 1,300 பேர் காயமடைந்தனர்.

2003 – ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஈராக் மீதான படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது.

2006 – கிழக்கு சாடில் 150 சாட் இராணுவத்தினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.

2015 – வலய மறைப்பு, சம இரவு நாள், பெருமுழுநிலவு அனைத்தும் ஒரே நாளில் நிகழ்ந்தன.

இன்றைய தின பிறப்புகள்:

கிமு 43 – ஆவிட், உரோமைப் புலவர் (இ. 17)

1615 – தாரா சிக்கோ, முகலாய இளவரசர் (இ. 1659)

1737 – முதலாம் இராமா, தாய்லாந்து மன்னர் (இ. 1809)

1811 – பிரான்சின் இரண்டாம் நெப்போலியன் (இ. 1832)

1828 – என்ரிக் இப்சன், நோர்வே கவிஞர், இயக்குநர் (இ. 1906)

1904 – பி. எப். ஸ்கின்னர், அமெரிக்க உளவியலாளர் (இ. 1990)

1906 – பாவெல் பெத்ரோவிச் பரெனாகோ, உருசிய-சோவியத் அறிவியளாளர், வானியலாளர் (இ. 1960)

1920 – பெலிக்சு யூரியேவிச் சீகல், சோவியத் வானியலாளர் (இ. 1988)

1921 – பி. சி. அலெக்சாண்டர், இந்திய அரசியல்வாதி (இ. 2011)

1925 – டேவிட் வாரன், ஆத்திரேலிய அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் (இ. 2010)

1940 – புலவர் அரசு, தமிழக எழுத்தாளர்

1940 – சி. பத்மநாதன், இலங்கை வரலாற்றாளர், கல்வியாளர்

1942 – காமினி திசாநாயக்கா, இலங்கை அரசியல்வாதி (இ. 1994)

1944 – எர்வின் நேயெர், நோபல் பரிசு பெற்ற செருமானிய உயிரி இயற்பியலாளர்

1945 – எர்லிங் பிராண்ட்நெஸ், நோர்வே அரசியல்வாதி

1957 – இசுப்பைக் லீ, அமெரிக்க நடிகர், இயக்குநர்

1965 – வில்லியம் தால்ரிம்பில், இசுக்கொட்டிய வரலாற்றாளர்

1966 – ஆல்கா யாக்னிக், இந்தியப் பாடகி

1980 – கணேஷ் வெங்கட்ராமன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1986 – ரிச்சா கங்கோபாத்யாய், இந்தியத் திரைப்பட நடிகை

1987 – கங்கனா ரனாத், திரைப்பட நடிகை

1987 – அரிச்சரண், தமிழ் திரைப்படப் பின்னணிப் பாடகர்

இன்றைய தின இறப்புகள்:

1351 – முகம்மது பின் துக்ளக், தில்லி சுல்தான் (பி. 1300)

1726 – ஐசாக் நியூட்டன், ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர், மெய்யியலாளர் (பி. 1642)

1858 – ராணி அவந்திபாய், இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை

1925 – கர்சன் பிரபு, பிரித்தானிய இந்தியாவின் 35வது தலைமை ஆளுநர் (பி. 1859)

1943 – எயின்ரிச் ராபர்ட் சிம்மர், செருமனிய வரலாற்றாளர், இந்திய ஆய்வாளர் (பி. 1890)

1977 – சார்ல்ஸ் லிட்டில்டன், நியூசிலாந்தின் 9வது ஆளுநர் (பி. 1909)

2008 – சோபன் பாபு, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1937)

2010 – கிரிஜா பிரசாத் கொய்ராலா, நேப்பாளத்தின் 30வது பிரதமர் (பி. 1924)

2013 – சில்லூர் இரகுமான், வங்காளதேசத்தின் 15வது அரசுத்தலைவர் (பி. 1929)

2014 – குஷ்வந்த் சிங், இந்திய எழுத்தாளர் (பி. 1915)

2015 – மால்கம் பிரேசர், ஆத்திரேலியாவின் 22வது பிரதமர் (பி. 1930)

2018 – ம. நடராசன், தமிழக அரசியல்வாதி, இதழாசிரியர்

இன்றைய தின சிறப்பு நாள்:

பன்னாட்டு சோதிட நாள்

உலகக் கதை படிக்கும் நாள்

விடுதலை நாள் (தூனிசியா, பிரான்சிடம் இருந்து 1956)

பன்னாட்டு பிரான்கோபோனி நாள்

உலக சிட்டுக்குருவிகள் நாள்