வரலாற்றில் இன்று மார்ச் 16….!!

 

இன்றைய தினம் : 2019 மார்ச் 16

கிரிகோரியன் ஆண்டு : 75ஆம் நாளாகும்.

ஆண்டு முடிவிற்கு  : 290 நாட்கள் உள்ளன.

 

இன்றைய தின நிகழ்வுகள்:

கிமு 597 – பபிலோனியா எருசலேமைக் கைப்பற்றியது.

455 – பேரரசர் மூன்றாம் வலந்தீனியன் உரோமில் விற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார்.

1190 – சிலுவைப் படையினர் யார்க் நகரின் யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். பல யூதர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

1521 – பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சை அடைந்தான்.

1792 – சுவீடன் மன்னன் மூன்றாம் குஸ்தாவ் சுடப்பட்டார். இவர் மார்ச் 29 இல் இறந்தார்.

1815 – இளவரசர் வில்லியம் நெதர்லாந்து இராச்சியத்தின் மன்னனாக தன்னை அறிவித்தான்.

1898 – மெல்பேர்ண் நகரில் ஐந்து குடியேற்ற நாடுகள் இணைந்து அரசியலமைப்பை உருவாக்கின. இதுவே ஆத்திரேலியாவின் உருவாக்கத்திற்கு முதலாவது காரணியாக அமைந்தது.[1]

1925 – சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5,00 பேர் வரை உயிரிழந்தனர்.

1926 – முதலாவது திரவ-எரிபொருளினால் உந்தும் ஏவூர்தியை மசாசுசெட்சில் இராபர்ட் காடர்ட் என்பவர் செலுத்தினார்.

1939 – பிராக் அரண்மனையில் இருந்து இட்லர் பெஹேமியா, மொராவியாவை செருமனியின் ஒரு பகுதியாக அறிவித்தார்.

1942 – முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது (ஏவப்பட்ட உடனேயே வெடித்துச் சிதறியது).

1945 – இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்தது.

1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 20-நிமிடக் குண்டுவீச்சில் செருமனியின் வூர்சுபேர்க் நகரின் 90 விழுக்காடு அழிந்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர்.

1962 – மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க விமானம் 107 பயணிகளுடன் காணாமல் போனது.

1963 – பாலியில் ஆகூங்க் மலை நெருப்பு கக்கி 11,000 பேர் வரை இறந்தனர்.

1966 – ஜெமினி 8, நாசாவின் 12வது மனிதரைக் கொண்டுசென்ற விண்கலம், ஏவப்பட்டது.

1968 – வியட்நாம் போர்: மை லாய் படுகொலைகள் இடம்பெற்றன. பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள் அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1969 – வெனிசுவேலாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.

1978 – முன்னாள் இத்தாலியப் பிரதமர் ஆல்டோ மோரோ கடத்தப்பட்டார். பின்னர் இவர் படுகொல்சி செய்யப்பட்டார்.

1985 – அசோசியேட்டட் பிரஸ் ஊடகவியலாளர் டெரி ஆன்டர்சன் பெய்ரூட் நகரில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் டிசம்பர் 4, 1991 இல் விடுதலை ஆனார்.

1988 – ஈராக்கில் குருதிய நகரான அலப்ஜாவில் நச்சு வாயுத் தாக்குதலில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

1989 – எகிப்தில் 4,400-ஆண்டு பழமையான மம்மி கிசாவின் பெரிய பிரமிடு அருகே கண்டுபிடிக்கப்பட்டது.

1995 – மிசிசிப்பி அடிமை முறையை ஒழிப்பதற்கான சட்டமூலத்தை ஏற்றுக் கொண்ட கடைசி அமெரிக்கமாநிலமானது.

2005 – இசுரேல் எரிக்கோவை அதிகாரபூர்வமாக பாலத்தீனியர்களிடம் ஒப்படைந்தது.

2006 – மனித உரிமைகளுக்கான அமைப்பை உருவாக்குவதற்கு ஐநாவின் பொதுச்சபை ஆதரவாக வாக்களித்தது.

2014 – கிரிமியாவில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய பொது வாக்கெடுப்பில் உக்ரைனில் இருந்து பிரிந்து உருசியாவுடன் இணையப் பெருமான்மையானோர் வாக்களித்தனர்.

இன்றைய தின பிறப்புகள்:

1693 – மல்கர் ராவ் ஓல்கர், மராட்டியப் பேரரசர் (இ. 1766)

1750 – கரோலின் எர்ழ்செல், செருமானிய-ஆங்கிலேய வானியலாளர் (இ. 1848)

1751 – ஜேம்ஸ் மாடிசன், ஐக்கிய அமெரிக்காவின் 4வது அரசுத்தலைவர் (இ. 1836)

1774 – மேத்தியூ பிலிண்டர்சு, ஆங்கிலேய நிலப்படவியலாளர் (இ. 1814)

1789 – ஜார்ஜ் ஓம், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1854)

1799 – அன்னா அட்கின்சு, ஆங்கிலேய தாவரவியலாளர், படப்பிடிப்பாளர் (இ. 1871)

1839 – சல்லி புருதோம், நோபல் பரிசு பெற்ற பிரான்சியக் கவிஞர் (இ. 1907)

1859 – அலெக்சாண்டர் பப்போவ், உருசிய இயற்பியலாளர் (இ. 1906)

1888 – எம். ஆர். சேதுரத்தினம், தமிழக அரசியல்வாதி

1901 – பொட்டி சிறீராமுலு, இந்திய விடுதலைப்போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1952)

1910 – இப்திகார் அலி கான் படோடி, இந்திய-ஆங்கிலேய துடுப்பாளர், 8வது பட்டோடி நவாப் (இ. 1952)

1916 – சுடோமு யாமகுச்சி, சப்பானிய பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 2010)

1918 – எஸ். ஏ. நடராஜன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர்

1926 – ஜெர்ரி லுவிஸ், அமெரிக்க நடிகர்

1927 – விளாடிமிர் கொமரோவ், உருசிய விண்வெளி வீரர் (இ. 1967)

1929 – அ. கி. இராமானுசன், இந்திய எழுத்தாளர், மொழியியல் ஆய்வாளர், நாட்டுப்புறவியலாளர் (இ. 1993)

1929 – இரா. திருமுருகன், தமிழகத் தமிழறிஞர்

1940 – இராஜேஸ்வரி சண்முகம், இலங்கை வானொலி அறிவிப்பாளர், நாடகக் கலைஞர் (இ. 2012)

1953 – ரிச்சர்ட் ஸ்டால்மன், கட்டற்ற மென்பொருள் இயக்கம், க்னூ திட்டம் போன்றவற்றின் தோற்றுவிப்பாளர்.

1954 – அருண் விஜயராணி, ஈழத்து-ஆத்திரேலிய எழுத்தாளர் (இ. 2015)

1959 – இயென்சு சுடோல்ட்டென்பர்க், நோர்வேயின் 47வது பிரதமர்

1959 – விஜயதாச ராஜபக்ச, இலங்கை அரசியல்வாதி

இன்றைய தின இறப்புகள்:

1940 – செல்மா லோவிசா லேகர்லாவ், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1858)

1974 – கோ. சாரங்கபாணி, தமிழக ஊடகவியலாளர், எழுத்தாளர், வெளியீட்டாளர் (பி. 1903)

1978 – மணியம்மையார், திராவிடர் கழகத்தின் தலைவர், சொற்பொழிவாளர், பெரியாரின் 2வது மனைவி (பி. 1920)

1989 – அழ. வள்ளியப்பா, தமிழகக் குழந்தை இலக்கியக் கவிஞர் (பி. 1922)

2003 – இரேச்சல் கோரீ, அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1979)

2008 – அனுரா பண்டாரநாயக்கா, இலங்கை அரசியல்வாதி (பி. 1949)

2014 – அமலெந்து டே, இந்திய வரலாற்றாசிரியர் (பி. 1929)

2016 – அலி அகமது உசேன் கான், இந்திய செனாய் இசைக்கலைஞர் (பி. 1939)