வரலாற்றில் இன்று மார்ச் 12….!!

 

 

இன்றைய தினம் : 2019 மார்ச் 12

கிரிகோரியன் ஆண்டு : 71ஆம் நாளாகும்.

ஆண்டு முடிவிற்கு  : 294 நாட்கள் உள்ளன.

 

இன்றைய தின நிகழ்வுகள்:

1622 – இயேசு சபை நிறுவனர்கள் லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார் ஆகியோருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர்களாக அறிவித்தது.

1879 – நூற்றுக்கும் அதிகமான ஆங்கிலப் படைகள் சூலுக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

1894 – முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.

1913 – ஆத்திரேலியாவின் வருங்கால தலைநகர் அதிகாரபூர்வமாக கான்பரா எனப் பெயரிடப்பட்டது. கான்பரா அமைக்கப்படும் வரையில் 1927 வரையில் மெல்பேர்ண் தற்காலிகத் தலைநகராக இருந்தது.

1918 – 215 ஆண்டுகளாக உருசியாவின் தலைநகராக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க் தலைநகர் அந்தஸ்து மாற்றப்பட்டு மாஸ்கோ தலைநகராக்கப்பட்டது.

1922 – ஆர்மீனியா, சியார்சியா, அசர்பைஜான் ஆகிய நாடுகள் திரான்சுகாக்கேசிய சோசலிச சோவியத் குடியரசு என்ற பெயரில் இணைந்தன.

1928 – கலிபோர்னியாவில் சென் பிரான்சிஸ் அணைக்கட்டு உடைந்ததில் 431 பேர் உயிரிழந்தனர்.

1930 – மகாத்மா காந்தி பிரித்தானிய ஆட்சியாளரின் உப்பு ஆதிக்கத்துக்கு எதிராக 200 மைல் நீள தண்டி யாத்திரையை ஆரம்பித்தார்.

1934 – எசுத்தோனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டன.

1938 – செருமானியப் படைகள் ஆஸ்திரியாவை ஆக்கிரமித்தன. அடுத்த நாள் இணைப்பு அறிவிக்கப்பட்டது.

1940 – பின்லாந்து மாஸ்கோவுடன் அமைதி உடன்பாட்டிற்கு வந்தது. கரேலியாப் பகுதி முழுவதும் சோவியத் ஒன்றியம் பெற்றுக் கொண்டது. பின்லாந்துப் படைகளும் மீதமிருந்த மக்களும் உடனடியாக வெளியேறினர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: பசிபிக் போர்: சாவகத்தில் இடம்பெற்ற சமரில் அமெரிக்க-பிரித்தானிய-ஆத்திரேலிய கூட்டுப் படை பண்டுங் என்ற இடத்தில் சப்பானிடம் சரணடைந்தது.

1950 – வேல்சில் வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 80 பேர் கொல்லப்பட்டனர்.

1954 – சாகித்ய அகாதெமி இந்திய அரசினால் தொடங்கப்பட்டது.

1967 – சுகார்ட்டோ இந்தோனீசியாவின் தலைவரானார்.

1968 – மொரீசியஸ் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது

1992 – மொரீசியஸ் பொதுநலவாய அமைப்பினுள் குடியரசானது.

1993 – மும்பையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

1999 – முன்னாள் வார்சா ஒப்பந்த நாடுகள் செக் குடியரசு, அங்கேரி, போலந்து ஆகியன நேட்டோவில்இணைந்தன.

2003 – சார்சு தொற்றுநோய் குறித்த உலகளாவிய எச்சரிக்கையை உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக விடுத்தது.

2003 – செர்பியாவின் பிரதமர் சொரான் டின்டிச் கொல்லப்பட்டார்.

2006 – தென்னாபிரிக்கா ஒரு நாள் சர்வதேச துடுப்பாட்டமொன்றில் 438/9 ஓட்டங்களைப் பெற்று ஆஸ்திரேலியாவை (434) வென்று சாதனை படைத்தது.

2007 – கலிபோர்னியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயினால் 2000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பு எரிந்து நாசமடைந்தன.

2011 – சப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து புக்குஷிமா டா இச்சி அணு உலை வெடித்தது.

2014 – நியூயார்க்கில் ஏற்பட்ட வாயு வெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர், 70 பேர் காயமடைந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்:

1685 – ஜியார்ஜ் பெர்க்லி, ஐரிய ஆயர், மெய்யியலாளர் (இ. 1753)

1824 – குசுத்தாவ் கிர்க்காஃப், உருசிய-செருமானிய இயற்பியலாளர் (இ. 1887)

1835 – சைமன் நியூகோம்பு, கனடிய-அமெரிக்க வானியலாளர், கனிதவியலாளர் (இ. 1909)

1863 – விளாதிமிர் வெர்னாத்ஸ்கி, உருசிய கனிமவியலாளர், வேதியியலாளர் (இ. 1945)

1889 – லிபியாவின் இத்ரிசு (இ. 1983)

1907 – மா. இராசமாணிக்கனார், தமிழகத் தமிழறிஞர், வரலாற்றாளர் (இ. 1967)

1907 – தோரித் கோப்லீட், அமெரிக்க வானியலாளர் (இ. 2007)

1913 – ஒய். பி. சவாண், இந்திய அரசியல்வாதி (இ. 1984)

1922 – அப்துல் ரசாக் உசேன், மலேசியாவின் இரண்டாவது பிரதமர் (இ. 1976)

1928 – எட்வர்ட் ஆல்பீ, அமெரிக்க நாடக ஆசிரியர் (இ. 2016)

1945 – விஜய் குமார் பட்டோடி, இந்தியக் கணிதவியலாளர் (இ. 1976)

1947 – மிட் ராம்னி, அமெரிக்கத் தொழிலதிபர், அரசியல்வாதி

1949 – ரோப் கோஹன், அமெரிக்க இயக்குநர்

1953 – மாதவ் குமார் நேபாள், நேபாள அரசியல்வாதி, பிரதமர்

1968 – ஏரன் ஏக்கார்ட்டு, அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்

1983 – அதிஃப் அஸ்லம், பாக்கித்தானியப் பாடகர், நடிகர்

1984 – சிரேயா கோசல், இந்தியப் பாடகி

1994 – கிறிஸ்டினா கிரிம்மி, அமெரிக்கப் பாடகி (இ. 2016)

இன்றைய தின இறப்புகள்:

417 – முதலாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)

604 – முதலாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 540)

1853 – மத்தாயூ ஆர்ஃபிலா, எசுப்பானிய-பிரான்சிய நச்சியலாளர், வேதியியலாளர் (பி. 1787)

1914 – ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ், அமெரிக்கப் பொறியாளர், தொழிலதிபர் (பி. 1846)

1925 – சன் யாட் சென், சீனக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (பி. 1866)

1942 – வில்லியம் ஹென்றி பிராக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1862)

1960 – க்ஷிதி மோகன் சென், இந்திய வரலாற்றாளர், எழுத்தாளர் (பி. 1880)

1972 – வசீலி பெசென்கோவ், சோவியத், உருசிய வானியற்பியலாளர் (பி. 1889)

1999 – எகுடி மெனுகின், அமெரிக்க-சுவிட்சர்லாந்து வயலின் இசைக் கலைஞர் (பி. 1916)

2006 – சுந்தரிபாய், தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1923)

2009 – ஓமக்குச்சி நரசிம்மன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1936)

2016 – இலாயிடு சேப்ளி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1923)

இன்றைய தின சிறப்பு நாள்:

மின்வெளித் தணிக்கைக்கு எதிரான உலக நாள் (எல்லைகளற்ற செய்தியாளர்கள், பன்னாட்டு மன்னிப்பு அவைஆகியவற்றால் 2009 இல் கோரப்பட்டது)

மர நாள் (சீனா, தைவான், மாக்கடோனியக் குடியரசு)