முறிந்து விழுந்த தென்னைமரம்…. பெண் பணியாளருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மரம் விழுந்து பெண் பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பெரியகரம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஏரி கால்வாய்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏரிக்கரை அருகில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள ஒரு தென்னை மரம் திடீரென கால்வாயில் விழுந்தது. அப்போது ஏரி கால்வாயில் வேலை செய்து கொண்டிருந்த பூங்கொல்லைமேடு கிராமத்தில் வசிக்கும் சங்கர் என்பவரின் மனைவி சுதா, பார்த்திபன் என்பவரின் மனைவி மஞ்சுளா ஆகியோர் மீது தென்னைமரம் விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சுதா வரும் வழியிலே இறந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக மஞ்சுளாவை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *