பரிதாபத்தில் ப.சி…”கை கழுவிய தமிழ்.காங்” புறக்கணித்த தலைவர்கள்…!!

ப.சிதம்பரம் கைது செய்ததை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கேற்காதது தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  24 மணி நேரத்திற்கு பின்பு நேற்று செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.இதையறிந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விரைந்தனர்.

இதை தொடர்ந்து தன்னுடைய பத்திரிக்கையாளர் சந்திப்பை விரைவாக முடித்துக் கொண்ட ப.சிதம்பரம் டெல்லி வீட்டிற்கு சென்றார்.இதையடுத்து இரவோடு இரவாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் ப.சிதம்பரம் வீட்டின் சுவர் ஏறி குதித்து கைது செய்து இரவே சிபிஐ அலுவலகம் அழைத்துச் சென்றனர்.

Image result for p.chidambaram

ப.சிதம்பரத்தின் கைது காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ப.சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் அறிவித்து நடைபெற்று வருகின்றது.சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவர்கள் பங்கேற்காதது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Image result for tamilnadu congress committee

இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியின் தலைமையே இந்த விஷயத்தில் தீவிரம் காட்டி வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் , தங்கபாலு , கே ஆர் ராமசாமி , ஆரூண் , விஜயதாரணி , சுதர்சன நாச்சியப்பன் , பீட்டர் அல்போன்ஸ்  ஊட்டி எம்எல்ஏ கணேஷ் , மலேசியா பாண்டியன் , திருச்சி வேலுச்சாமி , அசன் மௌலானா , அமெரிக்கை நாராயணன் ,  காளிமுத்து , மலேசியா பாண்டியன் , பிரின்ஸ்  எம்எல்ஏ ராஜேஷ் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை எம்பிக்களை பொருத்தவரை திமுக போராட்டத்தில்  பங்கேற்றுள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.