பப்ஜி கேம் ஆபத்து… இளைஞர்களே உஷார்… நிபுணர்கள் எச்சரிக்கை…!!

பப்ஜி கேம் விளையாடுவதன் மூலம் இளைஞனின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்று பல நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். 

உலகளவில் பிரபல இணையவழி கேமான பப்ஜியை தெரியாதோர் யாரும் இருந்துவிட முடியாது. இப்பொழுதுள்ள இளைஞர்கள் அவர்களின் நேரத்தை பப்ஜி கேமில்தான் செலவிட்டுவருகின்றனர். குறிப்பாக, தற்போது உள்ள ஊரடங்கு காலத்தில் அவர்கள் வீடுகளில் முடங்கி கிடப்பதால், ஆன்லைனில் தான் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்த கேம் விளையாடும் இளைஞர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்ப்பட்டு வருவதாக பல்வேறு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சமீபத்தில் சீனா வெளியிட்ட குறிப்பிட்ட செயலிகள் நாட்டின் பாதுக்காப்பிற்காகத் தடை செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து பப்ஜி கேமுக்கும் தடைவிதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் போர்க்கோடி தூக்கி வருகின்றனர். பப்ஜி கேம் விளையாடும் இளைஞர்களுக்கு தவறான தூண்டுதலை ஏற்படுத்துவதாக இந்த குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இந்த கேமால் ஆக்கிரமிப்பு எண்ணங்கள் ஏற்படும் என்றும், அந்த எண்ணம் இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றும் கூறப்படுகிறது. மேலும் கவலை, மன அழுத்தம், பொறுமையின்மை போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, அவர்களைத் தற்கொலைக்கு தூண்டும் விதமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர் .

ஒரு நபர் ஒரு நாளில் ஒரு மணி நேரம் கேம் விளையாடினால், அது மனதிற்கு மிகவும் நல்லது, ஆனால், ஒரு நாளைக்கு 4-6 மணிநேரம் தொடர்ச்சியாக விளையாடுவதால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் தீங்கு விளைவிக்கும் என உலக சுகாதார அமைப்பு முன்பே எச்சரித்திருந்தது. இரவு நேரங்களிலும் தொடர்ச்சியாக கேம் விளையாடுவது, கண் பார்வையைப் பெரிதும் பாதிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில், தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன், பப்ஜி கேம் விளையாட செல்போன் கொடுக்கவில்லை என்பதற்காக மன அழுத்தத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கேம் போதை, தற்கொலை போன்ற எண்ணங்களை எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை இதன்மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டும். கேமின் இறுதியில் வெற்றி அடைந்துவிட்டால் அவருக்கு ‘வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்’ பட்டம் கிடைப்பது, ஒருவித வெற்றி உணர்வை ஏற்படுத்துகிறது. யார் வென்றாலும் அந்த விளையாட்டை இன்னும் கவர்ச்சிகரமானதாகக் காண்கின்றனர். அதே நேரத்தில் தோல்வியுற்றவர்கள் தாழ்வு மனப்பான்மையால் உயிரை விட்டு விடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *