திருவிழாவை முன்னிட்டு…. ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஜாரி கொண்டலாம்பட்டியில் இருக்கும் மாரியம்மன், காளியம்மன் கோவிலில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனையடுத்து அம்மன் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.