“எளிமையான முறையில் பிரச்சாரம் மேற்கொள்ளும் நாம் தமிழர் கட்சியின் வேட்ப்பாளர் “வியப்பில் பொதுமக்கள் !!!…

எளிமையான முறையில் மன்சூர் அலிகான் பிரச்சாரம் செய்வதை கண்டு பொதுமக்கள் வியந்து பாராட்டினார் 

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

 


திண்டுக்கல் மக்களவை தேர்தல் தொகுதி நாம்தமிழர் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர்அலிகான் .  திண்டுக்கல் தொகுதி முழுவதும் வித்தியாசமான முறையில்பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் டீ விற்பது , துப்புரவுபணிசெய்தல்,பதனி விற்றல் போன்ற வித்தியாசமான முறையில் நூதன பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்

இதனையடுத்து திண்டுக்கல்  பகுதியில் வழக்கம் போல் பிரச்சாரம் செய்து வந்தார். அதன்  பின் அருகில் உள்ள கிராமங்களில் உள்ளவர்களிடம் வேலைக்குறித்து விசாரித்தார் அதன்பின்  பெரியமுளையூர் பகுதியில் வாக்கு சேகரித்தார் அதன்பின் தொடர் பிரச்சாரத்தால் ஏற்பட்ட சோர்வு  அங்கேயிருந்த அரசு பள்ளி மரத்தடியில் படுத்துதூங்கிவிட்டார்.

அப்பொழுது அங்கே வந்த சிறுவன் அவரை கண்டதும் கூச்சலிட்டான் அந்தகூச்சலை கேட்டு ஊர் பொதுமக்கள் அவரை காண ஒன்று கூடினர் அதன்பின் எழுந்த அவர் மக்களிடையே சிந்தித்து வாக்களியுங்கள் என்று கூறிசென்று விட்டார்