பொள்ளாச்சி விவகாரம் : மன்னார்குடி அரசினர் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்….!!

பொள்ளாச்சியில் ஆபாச வீடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவ, மாணவிகள்  போராட்டம் நடத்தினர். 

கோவை  மாவட்டம் பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டு ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் பாலியலுக்கு  உட்படுத்திய 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். மேலும் பெண்களை ஆபாசமாக கொடுமை படுத்தும் வீடியோவை வெளியிட்டனர்.இது சமூக வலைதளத்தில் வைரலாகி தமிழகம் முழுவதும்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். இதில் மூவாயிரத்திற்கும்  மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு  நியாயம் கிடைக்க வேண்டியும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றபட்டது குறிப்பிடத்தக்கது.