எங்கள காப்பாத்துங்க , நாங்க வாழனும்….. சேலத்தில் மீண்டும் ஒரு காதல் சிட்டுக்கள் ….!!

இளமதி – செல்வன் ஜாதி மறுப்பு திருமணத்தை தொடர்ந்து மற்றொரு திருமணம் அரங்கேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தின் பனமரத்துப்பட்டி அடுத்துள்ள கோம்பைக்காடு பகுதி பகுதியில் வசித்து வருபவர் சிவகுமார். சேலம் அரசு கல்லூரியில் படித்து வரும் சிவகுமாரின் மகள் ஜெயவர்த்தினிக்கும் அந்தப் பகுதியில் வசித்து வந்த கார்த்தி என்பவருடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஜெயவர்த்தினி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து கார்த்தியுடன் சேர்ந்து வாழ முடிவெடுத்த ஜெயவர்த்தினி பெற்றோரும் அனுமதியை மீறி திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் செய்துகொண்ட இருவரும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று வேறு சமூகத்தை சேர்ந்த நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

எங்களின் குடும்பத்தினரால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். அண்மையில் இளமதி- செல்வன் காதல் சாதி மறுப்பு திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மற்றொரு ஜாதி மறுப்பு திருமணமும் அந்த பகுதியில் அரங்கேறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *