புதிய சபாநாயகராக மேனகா காந்திக்கு வாய்ப்பு…..!!

மக்களவையின் புதிய சபாநாயகராக மேனகா காந்தி தேர்ந்தெடுக்கப்படலாமென்று தகவல் வெளியாகிள்ளது.

மக்களவை தேர்தலில் புதிதாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட பாஜகவின் தலைமையிலான மத்திய அரசின் மக்களவை முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் இடைக்கால சபாநாயகராக பாஜகவின் MP  வீரேந்திரகுமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மக்களவை புதிய சபாநாயகருக்கான தேர்தல் வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது.இதனால் 17_ஆவது மக்களவையின் சபாநாயகர் யார் என்ற கேள்வி அரசியல் விவாதங்களில் எழுந்து வருகின்றது. பல்வேறு தரப்பினர் பல விதமான கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

மேனகா காந்தி க்கான பட முடிவு

இந்நிலையில் புதிய சபாநாயகர் யார் என்று எழுந்த விவாதங்களில்,ஏற்கனவே  15-ஆவது மக்களவையில் சபாநாயகராக மீராகுமாரும், 16-ஆவது மக்களவையில் சுமித்ரா மகாஜனும் பதவி வகித்ததால், 17-ஆவது மக்களவை சபாநாயகர் பதவியும் பெண் தலைவருக்கே வழங்கப்படும் என்று கூறப்பட்டு வருகின்ற நிலையில் சபாநாயகர் பதவிக்கு பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய மந்திரியாக செயல்பட்ட மேனகா காந்தி நியமிக்கப்படலாம் என்று தெரிகின்றது. எனவே அவர் மக்களவை சபாநாயகராக ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படலாம்.