மனக்குமுறலை வெளிப்படுத்திய விக்கி!…. ஒருவேளை அதுக்காக இருக்குமோ?…. நெட்டிசன்கள் கமெண்ட்…..!!!!!

அஜித் நடிக்கும் 62-வது படத்தையும் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. எனினும் அவர் சொன்ன கதை திருப்தி அளிக்காததால் படத்திலிருந்து நீக்கி விட்டனர். இதையடுத்து அவருக்கு பதில் அஜித் படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். இதன் காரணமாக விரக்தியடைந்த விக்கி சமூகவலைத்தளத்தில் தத்துவ கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தன் இன்ஸ்டா பக்கத்தில் விக்னேஷ் சிவன் “கிடைச்சத இழக்குறதும், இழந்தது கிடைக்கிறதும் அதுக்கு பழகுறதும் நியாயம் தானடி” என்ற நானும் ரவுடிதான் பட பாடல் வரிகளை பகிர்ந்துள்ளார். இது ஏகே 62 தொடர்பான பதிவு என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.