“என் பாட்டி போயிட்டாங்க” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பாட்டி இறந்த வேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள சேட்டு நகரில் சுமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பி.காம் படித்து முடித்து விட்டு வேலை தேடி வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சுமனின் பாட்டி பாக்கியலட்சுமி உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார். அதன்பின் பாட்டி இறந்த வேதனையில் அவர் மன உளைச்சலில் இருந்திருக்கிறார்.

இதனை அடுத்து சுமன் வீட்டில் அனைவரும் தூங்கிய நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரின் குடும்பத்தினர் சுமனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சுமனை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *