“வீட்ல வேலை செய்ய மாட்டியா” மாணவி எடுத்த விபரீத முடிவு…. உறவினர் புகார்….!!

மன உளைச்சலில் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாகவெளி பெரிய தெருவில் ஆயம்மா என்பவர் வசித்து வருகிறார். இவரின் உறவினர் மகளான ஆனந்தி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-டூ படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தியின் பெற்றோர் இறந்து விட்டதால் அவரை ஆயம்மா தன்னுடன் வைத்து வளர்த்து வந்திருக்கிறார். அப்போது வீட்டில் வேலை செய்யாததால் ஆயம்மா ஆனந்தியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆனந்தி விஷத்தை குடித்து விட்டு கிழே மயங்கி கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஆனந்தி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆனந்தியின் உறவினர் செல்வராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *