காதல் மனைவி செய்த செயல்…. சுடுகாட்டில் தீக்குளித்த கணவர்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குத்தாம்பூண்டி கிராமத்தில் திருமாறன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனது அண்ணன் மணிமாறன் என்பவரது பழக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமாறன் விஜயலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜயலட்சுமி திருமாறனை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த திருமாறன் சுடுகாட்டுக்கு அருகில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தீக்காயத்துடன் கிடந்த திருமாறனை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே திருமாறன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *