எனக்கு அங்க வசதியா இல்ல… காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கொத்தனார் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மேல புதுவயல் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மதுமிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் மகள் இருக்கிறாள். இந்நிலையில் தனது கணவர் வீட்டில் போதிய வசதி இல்லாததால் மதுமிதா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் பூச்சிமருந்தை மதுவில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பின் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *