“அவங்களுக்கும் எனக்கும் ஒத்து போகல” ஊழியர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருத்தேர் குப்பை காரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சுந்தர மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சுந்தரமூர்த்தி தனது வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மனமுடைந்த சுந்தரமூர்த்தி வீட்டிலிருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்து வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்துள்ளார்.இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி சுந்தரமூர்த்தி பரிதாபமாக உயிரிழிந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மறைமலைநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.