பிச்சைக்காரருக்கு உதவ நினைத்த நபர்…. வேதனையடைந்த சம்பவம்…!!!

பிரான்சில், ஏழைகளுக்கு உதவும் நல்ல உள்ளம் படைத்த நபருக்கு கிடைத்த ஏமாற்றம், அவரை வேதனையடைய செய்திருக்கிறது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தின் அருகில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த இளைஞரிடம் ஏழைகளுக்கு உதவும் நபர் ஒருவர் தன் ஏடிஎம் கார்டை கொடுத்து உங்களுக்கு தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறார். அந்த இளைஞர் ஏடிஎம் மையத்திற்குள் சென்று அந்த கார்டை பயன்படுத்தியிருக்கிறார்.

அப்போது, அந்த கணக்கில் குறைவான பணம் இருப்பதை அறிந்து, அந்த இளைஞர் இயந்திரத்தில் குத்தியிருக்கிறார். இதை பார்த்த அந்த நபர் வேதனையடைந்தார். இது மட்டுமல்லாமல் அந்த பிச்சைக்காரர் அதிலிருந்த பணம் முழுவதையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்த தன் மிதிவண்டியில் ஏறி தப்பிவிட்டார். உதவ நினைத்த நபர் கடும் அதிர்ச்சியடைந்தார். மேலும் தன் வாழ்க்கையில் கிடைத்த அதிர்ச்சியான அனுபவம் இது என்று தெரிவித்துள்ளார்.