செல்போனில் படம் பிடித்து… மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த கொடுமை… வாலிபரின் வெறிச்செயல்…!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் அதனை செல்போனில் வீடியோவாக படம் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தில்லைநகர் பகுதியில் திலீப்குமார் என்ற நகை பட்டறை தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 30 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதனை தனது செல்போனில் வீடியோவாக படம் பிடித்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து தப்பி செல்ல முயன்ற திலீப் குமாரே மடக்கிப் பிடித்து விட்டனர்.

இதனையடுத்து பொதுமக்கள் அவரை அடித்து அவர் வைத்திருந்த செல்போனை வாங்கி பார்த்தபோது அதில் திலீப்குமார் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காட்சிகள் பதிவாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் செல்வபுரம் காவல் நிலையத்தில் திலீப்குமாரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திலீப் குமாரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். அதோடு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.