ஆட்ட நாயகன் தோனி 75*(46)….. அரைசதம் விளாசிய வீடியோ!!

ஆட்டநாயகன் விருது பெற்ற கேப்டன் தோனி அபாரமாக விளையாடி அரைசதம் விளாசிய வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது. 

12-ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது .இப்போட்டி  சென்னை சேப்பாக்கம்  சிதம்பரம்  ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு  தொடங்கியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது. அதன் பின் களம் கண்ட ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனால் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் கேப்டன் டோனி 3 வது விக்கெட்டுக்கு களமிறங்கி அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்தினார். குறிப்பாக கடைசி ஓவரில் கடைசி 3 பந்துகளில்  3 சிக்ஸர்களை தொடர்ச்சியாக பறக்க விட்டார். கேப்டன் டோனி 46 பந்துகளில் 75 ரன்கள் (4 சிக்ஸர், 4 பவுண்டரி)  விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். வெற்றிக்கு காரணமான டோனி ஆட்ட நாயகன் விருதை பெற்றார் . டோனி அதிரடியாக  விளாசிய வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.

 

https://twitter.com/Seithi_solai/status/1112552950289723394