“நிஜ வாழ்வில் ஒரு கஜினி !”.. திருமணத்தை மறந்து மீண்டும் மனைவியுடன் திருமணம்..!!

அமெரிக்காவில் ஒருவர் மறதி நோயால் திருமணமானதை மறந்து, தன் மனைவியை மீண்டும் திருமணம் செய்திருக்கிறார்.  

அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் கடந்த 12 வருடங்களாக மறதி நோயுடன் போராடி வருகிறார். அதாவது ஒரு நிமிடத்திற்கு முன்பு நடந்ததும் அவருக்கு மறந்துவிடுமாம். எனவே அவரது மனைவி குழந்தையாக நினைத்து தன் கணவரை கவனித்து வருகிறார். ஒரு நாள் தனக்கு திருமணமானதை மறந்து மீண்டும் தன் மனைவியையே திருமணம் செய்திருக்கிறார்.

இதுகுறித்து அவரது மனைவி கூறுகையில், ஒரு நிமிடத்திற்கு முன்பு நடந்தது கூட அவருக்கு மறந்துவிடும். இந்நிலையில் ஒரு நாள் நாங்கள் டிவி பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது அதில் திருமணம் நடைபெறுவது போன்று ஒரு காட்சி வந்தது. அதனை பார்த்த என் கணவர், நாமும் திருமணம் செய்வோமா? என்று கேட்க, திருமணமாகி 12 வருடங்களுக்கு பின்பு மீண்டும் திருமணம் செய்தோம் என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *