மகளை கொன்ற தந்தை…. விடுதியில் நடந்த சம்பவம்…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

மகளை கொன்றுவிட்டு தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி பிரிக்லின் சாலையில் தனியார் போக்குவரத்து நிறுவன ஊழியரான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 9 வயதுடைய தீக்ஷிதா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நல குறைவால் சுதா இறந்துவிட்டதால் தனது மகளின் நிலையை கண்டு ரவிச்சந்திரன் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் மாமல்லபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஒரு விடுதியில் ரவிச்சந்திரன் தனது மகளுடன் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இதனையடுத்து நீண்ட நேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வாயில் நுரை தள்ளிய நிலையில் தீக்ஷிதாவும், தூக்கில் தொங்கியபடி ரவிச்சந்திரனும் சடலமாக கிடந்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் ரவிச்சந்திரன் எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும், நாங்களாகவே இந்த முடிவை எடுத்துக் கொண்டோம் எனவும் எழுதியுள்ளார். இதனை அடுத்து ரவிச்சந்திரன் தனது உறவினரான நிவாஸ் என்பவருக்கு வாட்ஸ்அப் மூலம் நானும், எனது மகளும் என்று இந்த உலகை விட்டு செல்வதாக தகவல் அனுப்பியுள்ளார். ரவிச்சந்திரன் உணவில் விஷம் கலந்து தீக்ஷிதாவை கொலை செய்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *