எங்க தான் போயிருப்பான்….? தேடி அலைந்த உறவினர்கள்… நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற கனகராஜ் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கனகராஜை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.

அப்போது அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகில் கனகராஜனின் உடைகள் கிடந்துள்ளது. இதனால் அவர் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கனகராஜனின் சடலத்தை மீட்டனர்.

அதன் பிறகு காவல்துறையினர் கனகராஜனின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *