“குழந்தையை எங்கிட்ட கொடு” வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூலி தொழிலாளியான ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உதயகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ரமேஷ் தினமும் மது அருந்துவிட்டு தனது மனைவியை தாக்கியுள்ளார். இதனால் உதயகுமாரி  கோபித்துக் கொண்டு தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனை அடுத்து அங்கு சென்ற ரமேஷ் குழந்தையை கொடுக்குமாறு உதயகுமாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் உதயகுமாரி அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ரமேஷ் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதனையடுத்து ரமேஷின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது தூக்கில் தொங்கியபடி ரமேஷ் இறந்து கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *