என்னால கொடுக்க முடியல… செய்வதறியாது திணறிய வாலிபர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

ஊரடங்கு நேரத்தில் வருமானம் இன்றி தவித்த வாலிபர் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வரதராஜபுரம் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கணினி மையம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை இருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபாகரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊரான விருதுநகருக்கு சென்றுள்ளார். அதன் பின் பிரபாகரனால் வங்கியில் தான் ஏற்கனவே வாங்கிய 8 லட்ச ரூபாய் கடனை அடைக்க முடியவில்லை.

மேலும் ஊரடங்கு நேரத்தில் போதிய வருமானம் இன்றி அவதிப்பட்டு வந்த பிரபாகரன் மன உளைச்சலில் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *