மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி…. வாலிபரின் மூர்க்கத்தனமான செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

 15 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் விமல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விமல்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்ததால் நீதிபதி எழிலரசி தீர்ப்பு வழங்கியுள்ளார். அவர் தனது தீர்ப்பில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட விமல்ராஜ் சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் 2,000 ரூபாய் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு மூலமாக ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி எழிலரசி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *