என்ன சொன்னாலும் திருந்த மாட்டிங்களா…. வாலிபர் செய்த செயல்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குந்தாரப்பள்ளி பகுதியில் குருபரப்பள்ளி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில் அவர் அப்பகுதியில் வசித்து வரும் நஞ்சுண்டன் என்பதும், அவர் அப்பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் 500 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்