மாணவியுடன் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயில்பட்டி பகுதியில் வெள்ளையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியசாமி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பகுதியில் வசிக்கும் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பெரியசாமிக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இதனால் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பெரியசாமி அவரை கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து அந்த மாணவியின் தாயார் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெரியசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *