“மம்தாவுக்கு நடந்த துரோகம் “பாஜக அதிரடி ..!!

சொந்த கட்சிக்காரர்களே பாஜகவுடன் இணைந்து துரோகம் செய்தது மம்தா பேனர்ஜிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் திடீரென பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து விட்டனர். இச்சம்பவம் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மம்தா பானர்ஜி மீது அதிருப்தியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 50 கவுன்சிலர்களும்  பாஜகவில் இணைந்து விட்டனர். மேற்கொண்டு இன்னும் பல எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொந்த கட்சிக்காரர்களே துரோகம் செய்தது மம்தாவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .