மோட்டார் வாகனச் சட்டத்தை என்னால் இப்போது செயல்படுத்த முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. அதன்படி வாகன விதிகளை மீறுபவர்களுக்கு பல மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் விதியை மீறும் வாகன ஓட்டிகள் ஆயிரக்கணக்கில் அபராதம் செலுத்தி வருகின்றனர். இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு ஒரு சிலர் ஆதரவாகவும் பலர் எதிர்ப்பையும் காட்டுகின்றனர். பல மாநிலங்களில் இந்த சட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நபன்னா பவனில் பேசியதாவது, இந்த மோட்டார் வாகனச் சட்டத்தை என்னால் இப்போது செயல்படுத்த முடியாது. ஏனென்றால் நாங்கள் அதைச் செயல்படுத்தினால் மக்களுக்கு சுமை ஏற்படும் என்று எங்கள் அரசு அதிகாரிகள் கருதுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.