முதல்வர் முன்பு “ஜெய் ஸ்ரீராம் கோஷம்” பாஜகவினர் 10 பேர் கைது…!!

மேற்கு வங்க முதல்வர் முன்பு ஜெய் ஸ்ரீராம் கோஷம் கோஷம் போட்டதாக பாஜகவினர் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பெருவாரியான மாநிலங்களில் பாஜக_வின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவே இந்த தேர்தல் காட்டுகின்றது. மேற்குவங்கம் எப்போதும் திரிணாமுல் மற்றும் 35 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரிகள் கோட்டை என்று கருத்தப்பட்டதை பாஜக தகர்த்துள்ளது.வாக்கு எண்ணிக்கை முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களையும் ,  பாஜக  பா.ஜனதா 18 இடங்களையும் பிடித்துள்ளது.

Image result for mamata banerjee

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் மம்தா பானர்ஜி சென்ற போது அங்கிருந்த பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் எழுப்பியுள்ளனர். இது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இதே விவகாரம் தேர்தலின் போதும் மேற்கு வங்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து மீண்டும் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் முதல்வர்  மம்தாவை கடுப்பேத்தும் வகையில் அமைந்தது.

Image result for mamata banerjee

இதுதொடர்பாக மம்தா  கூறுகையில் , ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் போட்டவர்கள்  அனைவரும் வெளியே இருந்து வந்தவர்கள் அவர்கள் வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும் இதனால் பொறுமை இழந்த முதல்வர் மம்தா பானர்ஜி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டதையடுத்து இரவு வரை போலீசார் நடத்திய சோதனையில் 10 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்  அனைவரும் ஜெகதால் காவல் நிலையத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.