கலைஞர் நினைவிடத்தில் மம்தா பானர்ஜி மலர் தூவி மரியாதை..!!

தமிழக அரசியலின் அச்சாணியாக திகழும் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவர் தமிழக அரைநூற்றாண்டு கால அரசியலில் மையப்புள்ளி தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சென்னை முரசொலி அலுவலகத்தில் அவரது சிலையை மம்தா பானர்ஜி அவர்கள் திறந்து வைத்தார்.

Image result for மம்தா சிலை திறப்பு

இதைத்தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு, மு.க.ஸ்டாலின் மம்தா பானர்ஜி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி  செலுத்தினர். இந்நிகழ்வை தொடர்ந்து இன்னும் சற்று நேரத்தில் நடைபெற இருக்கக் கூடிய  பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்க இருக்கிறார்.