மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக புகைப்படம் வெளியிட்டுள்ளது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி. நெற்றியில் ரத்தம் வழிந்த நிலையில், மருத்துவமனையில் மம்தா பானர்ஜி அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. காயமடைந்த மம்தா பானர்ஜிக்கு எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ், நெற்றியின் நடுவில் ஆழமான வெட்டு மற்றும் முகத்தில் இரத்தத்துடன், மருத்துவமனை படுக்கையில் இருக்கும் பானர்ஜியின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளது. முதலமைச்சருக்கு வீட்டில் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர் கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி “எங்கள் தலைவர் மம்தா பானர்ஜிக்கு பெரும் காயம் ஏற்பட்டது. தயவுசெய்து அவருக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று பதிவிட்டுள்ளது.
https://twitter.com/AITCofficial/status/1768286010264502610