மம்தா நடவடிக்கை நாட்டிற்கு நல்லதல்ல… இது திட்டமிட்ட அரசியல் சதி… திருமாவளவன் எச்சரிக்கை…!!!!!!

திருச்சி மாநகர ஆர் சி சி எஸ் ஐ டி இ எல் சி திருச்சபைகளின் பொது நிலையினர் பேரவைகள் இணைந்து நடத்தும் சமூக அரசியல் ஆய்வரங்கம் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ராகுல் காந்தி மீதான நடவடிக்கை திட்டமிட்ட அரசியல் சதி. ராகுல் காந்தியை தேர்தலில் நிற்க விடாமல் தடுத்து எதிரியே இல்லாத தேர்தல் களத்தை சந்திக்கிற விளைவான அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மம்தா பானர்ஜி காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்க முயற்சி செய்வது அவருக்கும் நல்லதல்ல நாட்டிற்கும் நல்லதல்ல என திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.