“மாமல்லபுரம் கோவில்” குவிந்த ஏராளமான சுற்றுலா பயணிகள்…. வியாபாரிகளின் வேண்டுகோள்….!!!

மாமல்லபுரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. எனவே பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று மாமல்லபுரத்தில் குவிந்தனர். மேலும் அங்குள்ள கடற்கரைக் கோவில், வெள்ளை உருண்டைகள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. இந்நிலையில் கடற்கரைக்கு செல்வதற்கு மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் வார இறுதி நாட்களில் தான் பெரும்பாலும் வருகை தருவர். தற்போது வார இறுதி நாட்களில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் செய்வோர் வாழ்வாதாரத்தை இழந்ததோடு, மாற்று தொழில் செய்வதற்கான பொருளாதார வசதியும் இல்லை. ஆகவே அரசு தங்களுக்கு உரிய உதவிகள் செய்திட வேண்டும் என்று நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *