இந்தியாவில் 15 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களை தாக்கிய மால்வேர்..!!

உலக அளவில் சுமார் 25 மில்லியன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களை மால்வேர் ஒன்று தாக்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

”ஏஜெண்ட் ஸ்மித்” என்றதொரு மால்வேர் சர்வதேச அளவில் சுமார் 25 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களைத் தாக்கியுள்ளது. தொழில்நுட்ப ஆய்வின் அடிப்படையில் இந்தியாவில் மட்டும் சுமார் 15 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களை ‘ஏஜெண்ட் ஸ்மித்’ மால்வேர் தாக்கியுள்ளது. கூகுளுக்குத் தொடர்புடைய ஒரு அப்ளிகேஷனாகவே ஸ்மார்ட்ஃபோனில் இருக்கும் அந்த மால்வேர் மெல்ல ஃபோனில் இருக்கும் மற்ற ஆப்ஸ்களையும் தாக்கத் தொடங்குகிறது.

Image result for Malware to hit 15 million smartphones in India

ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கே தெரியாமல் இந்தத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. சைபர் க்ரைம் துறையும் கடந்த ஜூன் மாதத்தில் ஆபத்தை விளைவிக்கும் மூன்று மால்வேர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. தற்போது, இந்த ஏஜெண்ட் ஸ்மித் மால்வேர் ஸ்மார்ட்ஃபோன்களில் தேவையில்லாத மற்றும் தொடர்பே இல்லாத விளம்பரங்களை வெளியிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

Image result for Gooligan

ஆனாலும், இதன் தாக்குதல் மற்றும் விளைவுகள் குறித்த முழு தகவல்களும் இதுவரையில் முழுமையாகக் கண்டறியப்படவில்லை. போலி விளம்பரங்கள் மூலம் பலமான வருவாய் ஈட்டும் மால்வேர்களாக காப்பிகேட் (CopyCat), கூலிகன் (Gooligan) மற்றும் ஹம்மிங்பேட் (HummingBad) ஆகிய 3 மால்வேர்கள் குறித்து சைபர் க்ரைம் எச்சரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *