“நாடு கடத்த எதிர்ப்பு” மல்லையா மனு இன்று விசாரணை…!!

 நாடுகடத்த எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்துள்ள மல்லையா மனு இன்று விசாரணைக்கு வருகின்றது. 

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன்பெற்று விட்டு அதை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற இந்திய தொழிலதிபர்  விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகின்றது.

Image result for மல்லையா

லண்டன்  உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜார்ஜ் லெக்காட், ஆண்ட்ரூ போப்பிள்வெல் அமர்வு முன்பு இன்று நடைபெறும் விசாரணையில்  இந்திய அரசு மற்றும் மல்லையா தரப்பு வக்கீல்கள் தங்களது  வாதங்களை முன் வைக்கின்றனர். இதன்  வாதம் , பிரதிவாதம் முடிவடைந்தவுடன்  தீர்ப்பை  ஒத்திவைக்க வாய்ப்பு இருக்கின்றது. விஜய் மல்லையாவின்  மனு ஏற்கப்பட்டால் இதன் விரிவான விசாரணை நடைபெறும் . அதே போல மனு நிராகரிக்கப்பட்டால் , தீர்ப்பு வெளியாகிய   28 நாள்களுக்குள் அவர் நாடு கடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.