சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் மலிங்கா..!!

இலங்கை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் மலிங்கா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்கா (35). ‘யார்க்கர் மன்னன்’ என்றழைக்கப்படும்  இவர் உலக கோப்பை தொடர் முடிவுடன் தனது ஓய்வு அறிவிப்பார் என்று சொல்லப்பட்டது.  ஆனால் மலிங்கா ஓய்வை அறிவிக்கவில்லை. இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாட வந்துள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது.

Image result for malinga world cup 2019

இந்த போட்டியில் பங்குபெற்று விளையாடும் மலிங்கா அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். இத்தகவலை இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே  கொழும்பில் நேற்று தெரிவித்தார். அவர் கூறும்போது “வங்கதேச அணியுடன் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியுடன் நான் ஓய்வு பெறுகிறேன் என்று மலிங்கா என்னிடம் சொன்னார்.ஆனால் அணித் தேர்வுக்குழுவிடம் என்ன சொன்னார் என்பது பற்றி எனக்கு தெரியாது என்று கருணாரத்னே தெரிவித்தார். மலிங்கா ஓய்வுக்குப் பின் ஆஸ்திரேலியாவில் குடிபெயர இருக்கிறார் என்று  ஏற்கனவே செய்தி வெளியாகி உள்ளது.